அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காகப் பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் எத்தகைய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அதில் முக்கிய அங்கமாக இருந்த முஸ்லிம் சமூகம், தற்போதைய அரசில் பிரதி அமைச்சுப் பதவிகளுடன் ஒடுக்கப்பட்டிருந்த போதிலும், தம் சமூகத்தின் நன்ம கருதியே இளைஞர்கள் வாக்களித்திருந்தனர்.
எனினும், திட்டமிட்ட ரீதியில் போதைப்பொருட்கள் பரப்பப்பட்டு இளைஞர்களின் போராட்டச் சிந்தனைகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இளைஞர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்து செயற்பட்டாலும், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் ஆதரவு அலையும் தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
அரசாங்கம் இளைஞர்களை ஏமாற்ற முனைகிறது என்ற எண்ணம் தற்போது இளைஞர்கள் மத்தியில் மேலெழுந்து வருவதால், இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண சூரியனின் யூடியூப் தளத்தை பார்வையிடவும்.
Latest News
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
Local
12 September 2026
எதிர்வரும் நாட்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்!
Local
12 September 2026
நாளை கல்யாணம், இன்று கண்ணீர்! - மணமகனின் கண் முன்னேயே மணப்பெண் பரிதாப பலி
Local
12 September 2026
நாடாளுமன்றம் மற்றும் அரச பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
Local
12 September 2026
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை தந்தார் சீன ஜனாதிபதி!
Local
12 September 2026
தெஹிவளை குண்டுத்தாக்குதல் : பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம்!
Local
12 September 2026
நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் ஆலோசனை
Local
12 September 2026
லண்டன் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்? நக்கலாக பதிலடி
Local
12 September 2026
ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் மோடி!
Local
12 September 2026
லண்டன் வாழ் தமிழர்களை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்
Local
12 September 2026