தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, "இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமாகவே பிரயோகிக்கப்படும்.
பொதுப் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் எமக்கு எந்த இரக்கமும் இல்லை" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.
அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Latest News
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகள்' திருட்டு: ஊழியர் உட்பட இருவர் கைது
துபாயில் மாபெரும் இறுதிப்போட்டி: 7 முறை சாம்பியன் இந்தியாவை வீழ்த்துமா இலங்கை?
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை: ஆக்கிரமித்தால் உடனடி அதிரடி பதிலடி!
ஆர்தர் ஆஷ் மைதானத்தில் புதிய வரலாறு: எலினா ரைபாகினா அபார வெற்றி!
சீனா - இந்தியா இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்: புதுடெல்லியில் தலைவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தலா AI? உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரிக்கை!
அஜித்தின் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்: சர்ப்ரைஸ் கொடுத்த த்ரிஷா!
கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள்: பிரதி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இலங்கைக்கு வருகை தந்த IMF குழு: நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்!
ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு