General13 September 2026

அநுராதபுர பேரணி - மகிந்த ராஜபக்‌சவைச் சிங்கமாக சித்தரித்து வெளியான காணொளி

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச கலந்துகொள்வதை முன்னிட்டு, சிங்கம் மற்றும் அதன் குட்டியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட விளம்பர காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.

இந்த காணொளியில் ஆபத்தில் சிக்கும் சிங்கக் குட்டி ஒன்றை, பெரிய சிங்கம் ஒன்று வந்து காப்பாற்றுவது போல காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்‌சவின் படமும், "அநுராதபுரத்திற்கு வரும் சிங்கம்" என்ற சிங்கள வாசகங்களும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

கட்சியின் தேசிய அமைப்பாளரும், மகிந்த ராஜபக்‌சவின் மகனுமான நாமல் ராஜபக்‌ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில், இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes