பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் இதற்கான விரிவான திட்டங்கள் வரவிருக்கும் பாதீட்டு திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நொச்சியாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் பாடப்புத்தகங்களுக்கான VAT வரியை நீக்குவதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன.
அத்துடன்,சுமார் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரசுத் துறையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கஹட்டகஸ்திகிலிய பகுதியில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கம் தனது ஸ்திரத்தன்மை குறித்த பயத்தினாலோ அல்லது அரசியல் அச்சுறுத்தல்கள் காரணமாகவோ இந்தப் பேரணிகளை நடத்தவில்லை என்றும், இந்த அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
Latest News
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்
Local
14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!
Local
14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026
எரிபொருள் விலை திருத்தம் குறித்து அமைச்சர் தகவல்!
Local
14 September 2026