நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறி செயற்பட்ட கொழும்பு பகுதியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டால், விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய இறக்குமதியாளர் முகவரி மற்றும் விவரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்துள்ளது.
விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் வர்த்தகர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்பாக 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் சரியான முடிவுகளை எடுக்கவும், நியாயமற்ற விலை நிர்ணயத்தைத் தடுக்கவும் விலை வெளிப்படைத்தன்மை அவசியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

Latest News
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026
தாய்மாமனின் மாபெரும் பரிசு - மதுரை செல்கிறார் முதலமைச்சர் விஜய் - அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அதிஷ்டம்!
Local
16 September 2026
உங்கள் வேலைக்கு ஆபத்தா? : AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை!
Local
16 September 2026
தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை - உதய கம்மன்பில
Local
16 September 2026
லண்டன் பயணத்தில் கிடைத்தது என்ன? : நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!
Local
16 September 2026
தங்க விலையில் அதிகரிப்பு இல்லையா? இன்றைய நிலவரம் உள்ளே!
Local
16 September 2026