இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையே இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின்படி,முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தாய்லாந்துத் தலைநகர் பேங்கொக்கில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழில்அமைச்சர் ஜூலபன் அமோர்ன்விவாட் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தங்களின்படி, வேலைவாய்ப்பு , சட்டப்பூர்வ பாதுகாப்பு, நலன்புரி உதவிகள், விசா மற்றும் வேலைக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான முறையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான கடுமையான செயற்பாடுகள் இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டமைப்பின் கீழ் பணிக்கு அமர்த்தப்படும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, தாய்லாந்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட வேதனம் மற்றும் சலுகைகள் உட்பட முழுமையான உரிமைகளும் பாதுகாப்பும் சமமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Latest News
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026
IMAX வசூலில் வரலாறு படைத்த ‘The Odyssey’ திரைப்படம்!
Local
15 September 2026
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி படிவங்கள் கண்டுபிடிப்பு!
Local
15 September 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
15 September 2026
அநுராதபுர பேரணியில் புலிப் பிரசார குற்றச்சாட்டு: பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விசாரணை ஒப்படைப்பு!
Local
15 September 2026
செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரை ‘தேசிய சிறுவர் தின வாரம்’: அமைச்சரவை அனுமதி
Local
15 September 2026
பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆத்திரம்: கடலை நோக்கிச் சத்தமிட்ட விசித்திரக் கூட்டம்!
Local
15 September 2026
2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
15 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது
Local
15 September 2026