General16 September 2026

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச இன்று நள்ளிரவு (16) சிங்கப்பூருக்குப் புறப்பட்டார்.

எதிர்வரும் 24ஆம் திததி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வெளிநாடு சென்றதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அவருடன் ரோஹித ராஜபக்சவின் அத்தையும் புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இன்று நள்ளிரவு 01.10-க்கு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் வானூர்தி SQ-469 மூலம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes