அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகைகளைத் திரட்டி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த நபருக்கு, வைப்புகளைப் பெறுவதை உடனடியாக நிறுத்துமாறும், நிலுவையில் உள்ள வைப்புப் பணத்தை மீளச் செலுத்துமாறும் இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
தம்புள்ளையைச் சேர்ந்த பேமதாசகே இந்திக பிரேமகுமார என்பவர் 2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கடன் ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கி, 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிப் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியுள்ளார்.
நிதியியல் வியாபாரச் சட்டத்தின் 42 ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 2026 ஜூலை 15 அன்று இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்தது.
இதனையடுத்து, உறுதிமொழிப் பத்திரங்கள் அல்லது வேறு எந்த வழிகளிலும் பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகைகளை ஏற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து பெற்ற அனைத்து நிலுவை வைப்புப் பொறுப்புகளையும் மீளச் செலுத்த வேண்டும் என்று மத்திய வங்கி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களின் நலன் கருதி, 2026 செப்டம்பர் 16 அன்று மத்திய வங்கி இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும் குறித்த நபரால் இதுவரை சேகரிக்கப்பட்ட மொத்த வைப்புத் தொகை, பாதிக்கப்பட்ட வைப்பாளர்களின் எண்ணிக்கை அல்லது மீளச் செலுத்த வேண்டிய தொகையின் அளவு குறித்த விபரங்கள் மத்திய வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
Latest News
"மொழி எனக்கு ஒருபோதும் தடையல்ல!" - சினிமா பயணம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா!
Local
18 September 2026
உருவக் கேலிக்கு எதிராகக் கொதித்தெழுந்த ரசிகர்கள்: கத்ரீனாவுக்கு ஆதரவளித்த தென்னிந்திய பிரபலங்கள்
Local
18 September 2026
அவுஸ்திரேலியாவில் திடீர் பரபரப்பு :50 மீட்டர் தொலைவில் கடலில் ஆபத்து!
Local
18 September 2026
போரையும் தாண்டிய தந்தை பாசம்! 15 ஆண்டுகளுக்குப் பின் சுவரை உடைத்து மகனின் கனவை மீட்ட நெகிழ்ச்சி காட்சி!
Local
18 September 2026
கைதுக்கு எதிரான சுரேஷ் சலேயின் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 27இல் உத்தரவு!
Local
18 September 2026
தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Local
18 September 2026
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள் - கண்ணீர் மல்க தாயார் கோரிக்கை
Local
18 September 2026
ரீல்ஸ் மட்டும்தான் வந்தது, முதலீடு வரவில்லை - முதலமைச்சர் விஜய் மீது பாயும் விமர்சனங்கள்
Local
18 September 2026
"அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!
Local
18 September 2026
வடகிழக்கு பாகிஸ்தானில் அதிர்ச்சி: பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம்! - 17 பேர் உயிரிழப்பு
Local
18 September 2026