தொடருந்து தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலக தொடருந்துகளும் தற்போது வழமைபோல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு தொடருந்தைத் தவிர ஏனைய அனைத்து தொடருந்து சேவைகளையும் வழமைபோல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து போக்குவரத்து அதிகாரியும் ஊடகப் பேச்சாளருமான அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தொடருந்து பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று 16ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
எனினும், பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே நேற்று பிற்பகல் பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான தொடருந்து நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் இணைந்துள்ளதாகவும், சிலர் பணிப்புறக்கணிப்பை முறியடிக்கும் வகையில் செயற்படுவதாகவும் சுமேத சோமரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படவில்லை எனவும், தொடருந்து திணைக்களத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தாலும் அனைத்து தொடருந்து பாதைகளிலும் சேவைகளை வழமைபோல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை கரையோரப் பாதையில் 13 தொடருந்து சேவைகளும், சிலாபம் பாதையில் 11 சேவைகளும், பிரதான மற்றும் வடக்கு தொடருந்து பாதைகளில் 15 சேவைகளும், களனி பள்ளத்தாக்குப் பாதையில் 7 சேவைகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
"வாழ்க தமிழ், வளர்க தமிழ்!" - சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்ற சீன மாணவியின் நெகிழ்ச்சி!
Local
17 September 2026
தெமட்டகொடவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு
Local
17 September 2026
புசல்லாவையில் தொடரும் சோகம் - ஒரே நாளில் 2 தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு!
Local
17 September 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவுக்கு விளக்கமறியல்
Local
17 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் டித்வா புயலை விடப் பேரழிவை ஏற்படுத்தும் - சஜித் சாடல்
Local
17 September 2026
வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி
Local
17 September 2026
ஸ்ரீலங்கன் வானூர்தி சேவையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை
Local
17 September 2026
மட்டக்குளி கோர விபத்து: சிற்றூந்து சாரதி விளக்கமறியலில்
Local
17 September 2026
அனிருத் இசையில் கர்நாடக இசை அரசியாக மாறும் ராஷ்மிகா : கமல்ஹாசன் தொடங்கி வைக்கும் புதிய திரைப்படம்!
Local
17 September 2026
மட்டக்குளி கொடூர விபத்து: சிற்றூந்து சாரதி கஞ்சா பயன்படுத்தியமை உறுதி
Local
17 September 2026