மட்டக்குளி பகுதியில் மூவர் உயிரிழந்த விபத்துடன் தொடர்புடைய சிற்றூந்தை செலுத்திய சாரதி, விபத்து இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ. ஜீ. ஜே. சோனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – மட்டக்குளி, கந்தஉட சந்திப் பகுதியில் நேற்றிரவு பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.
மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை பகுதியில் இருந்து அதிவேகமாகப் பயணித்த சிற்றூந்து ஒன்று, மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் மூன்று உந்துருளிகளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு 15 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிற்றூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து இடம்பெற்ற போது அவர் கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Latest News
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026