இலங்கையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றவுள்ள அமைதிப்படை பீஸ் கோப்ஸ் என்ற U.S. Peace Corps அமைப்பின் 34 புதிய பயிற்சி தன்னார்வலர்கள், தங்கள் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 'பீஸ் கோர்ஸ்' சேவைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு முன்னதாக, இந்தத் தன்னார்வலர்கள் சிங்களம் அல்லது தமிழ் மொழி, இலங்கை கலாசாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் கற்பித்தல் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சியை மேற்கொள்வார்கள்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இவர்கள் வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் பணியாற்றுவார்கள் அங்குள்ள இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து அமெரிக்க ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள்.
அத்துடன், அவர்கள் இலங்கைக் குடும்பங்களுடன் தங்கி, தாங்கள் பணியாற்றும் சமூகங்களின் ஒரு பகுதியாகத் திகழ்வார்கள்.
கொழும்பில் உள்ள 'பீஸ் கோர்ஸ்' அலுவலகத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) இந்தப் புதிய பயிற்சியாளர்களை வரவேற்றார்.
இலங்கையில் 'பீஸ் கோர்ஸ்' சேவையானது 1962-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முதல் அமெரிக்கத் தன்னார்வலர்கள் இங்கு வருகை தந்தனர்.
கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு மற்றும் சுனாமிக்குப் பிந்திய மீள்குடியேற்றப் பணிகள் ஆகியவற்றில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த நாட்டில் பணியாற்றியுள்ளனர்.
ஆங்கில மொழி கல்வியின் மீது புதிய கவனத்தைச் செலுத்தி, 2018 ஆம் ஆண்டில் இந்த திட்டம் முறையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்க அமைதிப்படை (U.S. Peace Corps) என்பது அமெரிக்க அரசின் ஒரு சுயாதீனமான அமைப்பாகும்.
இது உலகெங்கிலும் உள்ள வளரும் நாடுகளுக்கு உதவவும், அமெரிக்க மக்களுக்கும் அந்த நாடுகளின் மக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தவும் செயல்படுகிறது.
Latest News
இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!
Local
21 September 2026
காவல்துறையினரின் திடீர் முற்றுகை : கொலன்னாவையில் ஆயுதக் குவியல் சிக்கியது!
Local
21 September 2026
திருகோணமலை கடற்படை முகாமில் பெண்கள் காணாமல்போன வழக்கு: முன்னாள் பெண் கடற்படை வீராங்கனைகள் 2 பேருக்கு விளக்கமறியல்!
Local
21 September 2026
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
Local
21 September 2026
அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
Local
21 September 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!
Local
21 September 2026
ஜே.வி.பியின் கம்பஹா அலுவலக நிலையை மாற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
21 September 2026
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026