எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலை காரணமாக இலங்கையில் 78,000-க்கும் மேற்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதார இழப்பு தொடர்பில் தலையிடுவதற்கான பொறிமுறை தொழில் அமைச்சிடம் தற்போது இல்லை என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
முறைசார்ந்த துறையில் பணியாற்றுவோர் தற்போதைய வானிலை நிலைமையால் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை எனவும், அதேவேளை விவசாயம் உள்ளிட்ட முறைசாரா துறைகளில் ஈடுபட்டுள்ள கணிசமான எண்ணிக்கையிலானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் மூடப்படுவது போன்ற முறைசார்ந்த துறையுடன் தொடர்புடைய வேலைவாய்ப்பு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், தொழில் அமைச்சினால் தலையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முறைசாரா துறையில் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்புகளுக்காக தலையிடுவதற்கான தற்போதைய பொறிமுறை அமைச்சிடம் இல்லை எனவும் தொழில் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவுவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026
சீரற்ற காலநிலை காரணமாக 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Local
21 September 2026
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
21 September 2026
22வது திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு!
Local
21 September 2026
23,270 குற்றச்சாட்டுகள், 250 நாட்கள் விசாரணை: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான வழக்கின் தீர்ப்பு நாளை!
Local
21 September 2026
சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!
Local
21 September 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
21 September 2026
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!
Local
21 September 2026
கடந்த 10 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவு!
Local
21 September 2026
AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!
Local
21 September 2026