சவூதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை, இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துடன் ஒருங்கிணைந்தும், இந்த வழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அனோஜன் சிவராசாவின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கு தற்போது சவூதி அரேபியாவில் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய 'இண்டர்போல்' ஊடாக 'நீல அறிவித்தல்' கோரிக்கை!
Local
19 September 2026
‘Missile City’ முதல் ஏவுகணை தளங்கள் வரை ஈரானின் அடுத்த நகர்வு என்ன? இராணுவ சக்தி குறித்து புதிய கருத்து
Local
19 September 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி: ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று ஜப்பான் பயணம்!
Local
19 September 2026
கேகாலை விருந்தகமொன்றில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
Local
19 September 2026
சமூக ஊடகங்களில் பரவும் மருத்துவக் கட்டணப்பட்டியல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை தெளிவுபடுத்தல்
Local
19 September 2026
தனது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடிய அனோஜன் சிவராசா
Local
19 September 2026
என்னுடைய அப்பா இன்று முதலமைச்சராக இருக்கிறார்; அவருக்கும் நன்றி – ஜேசன் சஞ்சயின் உருக்கமான பேச்சு
Local
19 September 2026
நானுஓயாவில் வாகன விபத்தில் 34 வயதான பெண் உயிரிழப்பு!
Local
19 September 2026
மூன்று நிறுவனங்களின் இணையதளங்களுக்குள் தாமாக ஊடுருவிய கூகுளின் 'ஜெமினி' AI
Local
19 September 2026
விஜய் உடனான நெகிழ்ச்சி நிகழ்வுகளைப் பகிர்ந்த விஜய் சேதுபதி: இணைய விவாதங்களுக்கு மத்தியில் விளக்கம்!
Local
19 September 2026