General19 September 2026

டொனால்ட் ட்ரம்ப் நினைத்தது நடக்கவில்லையா? நீடிக்கும் அமெரிக்க - ஈரான் போர் பதற்றம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் சூழல் கடந்த ஏழு மாதங்களாகத் தொடர்ந்து நீடித்து வருவதாக பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், இந்த மோதலை நான்கு முதல் ஐந்து வாரங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், மோதல் தொடர்ந்து நீடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு நாடுகளின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஊடாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சில புரிந்துணர்வுகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தாக்குதல்கள் தற்காலிகமாகக் குறைந்து அமைதி நிலவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த இடைநிறுத்தம் குறுகிய காலத்திற்கே நீடித்ததாகவும், அதன் பின்னர் அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இலக்குகளை நோக்கி ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகவும் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், மோதல் ஆரம்பித்தது முதல் ஈரானின் தற்போதைய ஆட்சியின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியின் முழு காணொளியை காண Sooriyan FM News என்ற யூட்யூப் தளத்தை பார்வையிடவும்
Related recommendation
Hiru TV News | Programmes