ஈரானில் தற்போதுள்ள இஸ்லாமிய ஆட்சிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால மோதலின் வரலாற்றுப் பின்னணியை 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என பேராதனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.
‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1979ஆம் ஆண்டுக்கு முன்னர் ஷா முகமது ரேசா பஹ்லவி தலைமையிலான ஆட்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தது. எனினும், 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து ஷா ஆட்சி முடிவுக்கு வந்து, அயதுல்லா ருஹொல்லா கமேனி தலைமையிலான புதிய அரசியல் அமைப்பு உருவானது.
இதன் பின்னர் அமெரிக்கா–ஈரான் உறவில் ஏற்பட்ட முக்கியமான திருப்பமாக தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பிணைக் கைதி நெருக்கடி அமைந்தது.
1979 நவம்பர் 4ஆம் திகதி ஈரானிய மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை கைப்பற்றியதுடன், 50-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அவர்கள் 444 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 1980 ஏப்ரலில் அமெரிக்கா ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்ததுடன், பொருளாதாரத் தடைகளையும் அறிவித்தது.
இந்த வரலாற்றுப் பின்னணியிலேயே ஈரான் தனது பாதுகாப்பு மற்றும் இராணுவ திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வந்ததாக எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாக, ஈரான் தனது பாதுகாப்புக் கொள்கைகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
முறைகேடுகள் மற்றும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
Local
20 September 2026
"அமைதியான காசாவாக" மாறும் கியூபா: அமெரிக்காவின் தடைகளால் உருக்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை!
Local
20 September 2026
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம்: ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!
Local
20 September 2026
இங்கிலாந்து மண்ணில் இலங்கை பரிதாபம்: தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அதிரடி
Local
20 September 2026
"த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி" - மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
Local
19 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு!
Local
19 September 2026
இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்
Local
19 September 2026
வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் குறித்து முறைப்பாடு செய்ய புதிய 'வட்ஸ்அப்' இலக்கம் அறிமுகம்!
Local
19 September 2026
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026