சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயங்காது என தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ், அங்கு பணியாற்றி வந்த அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதால் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் எனக் கூறினார்.
இது தொடர்பாக விடயப்பரப்பிற்குரிய அமைச்சருடன் பேசப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிலர் இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயல்வதாகவும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எதுஎவ்வாறாயினும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ள அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையானோரினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்.

Latest News
ரூ.46 கோடி காசோலை மோசடி : சகோதரி அம்பிகா மீது முறைப்பாடு அளித்த நடிகை ராதா!
Local
21 September 2026
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026
சீரற்ற காலநிலை காரணமாக 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Local
21 September 2026
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
21 September 2026
22வது திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு!
Local
21 September 2026
23,270 குற்றச்சாட்டுகள், 250 நாட்கள் விசாரணை: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான வழக்கின் தீர்ப்பு நாளை!
Local
21 September 2026
சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!
Local
21 September 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
21 September 2026
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!
Local
21 September 2026
கடந்த 10 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவு!
Local
21 September 2026