ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியுடன், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இரண்டு வருட காலத்துக்கு தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு, எவ்வித முன்னறிவிப்போ அல்லது உரிய நடைமுறையோ இன்றி தனது நியமனம் திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஏனைய வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காகத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தீடீர் நீக்கம் காரணமாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் இழக்கப்பட்டுப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது தொழில்முறை நற்பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் இடைக்கால குழுவிடமிருந்து 75 மில்லியன் ரூபாயை அவர் நட்டஈடாகக் கோரியுள்ளார்.
இந்த வழக்கில், அந்த குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் 9 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026