நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Latest News
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
Local
20 September 2026
ஐ.நா பொதுச்செயலாளர் போட்டியிலிருந்து மிஷேல் பெச்லெட் விலகினார்!
Local
20 September 2026
அஜித் ரசிகர்கள் சார்பில் புதிய அரசியல் கட்சி தொடக்கம் : பொதுச்செயலாளர் பதவி அஜித்துக்காக ஒதுக்கீடு!
Local
20 September 2026
அட்லீக்கு பதிலடி கொடுத்தாரா விஜய் சேதுபதி? சமூக வலைதளங்களில் வைரலாகிய காணொளி!
Local
20 September 2026
வீதியில் கிடைத்த தங்க நகையைக் காவல்துறையிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் சேர்த்த பொகவந்தலாவ இளைஞர்கள்
Local
20 September 2026
"120 நாட்களில் மதிப்பிட முடியாது... ஒரு வருடம் பொறுத்திருங்கள்" : முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து!
Local
20 September 2026
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்
Local
20 September 2026
"ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன்" : நடிகை ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேச்சு!
Local
20 September 2026
கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு (சிவப்பு) எச்சரிக்கை
Local
20 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிக ஓட்டங்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா புதிய உலக சாதனை!
Local
20 September 2026