General20 September 2026

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை!

கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கங்க இஹல கோரளை, உடபலாத்த, தொலுவ, உடுநுவர, யட்டிநுவர, கங்கவட்ட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட, மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes