சலுகைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முறையை மாற்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளைக் குறைத்துச் சேமிக்கப்பட்ட நிதியைக் கொண்டு அரச ஊழியர்களின் வேதனம் மற்றும் பொதுமக்களின் நலன்புரித் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாத்தறை - அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டு கால மாற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னுதாரணத்துடன், சலுகை முறையை மாற்றியமைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை இரண்டரை இலட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு மீதப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு மூன்று கட்டங்களாக வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரியில் மூன்றாவது கட்டமாக அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேதனத்தை 1750 ரூபாயாக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா 'மஹபொல' புலமைப்பரிசில் இன்றைய நிலவரப்படி 10,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்டம், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு, விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் குடிமக்களுக்கான கொடுப்பனவு, விவசாய மற்றும் கட்றொழிலாளர்களுக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விசேட அம்சமாக, சிறுவர் இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு, ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்புக் கணக்கில் இடப்படுகிறது.
இந்த சிறுவர்கள் 18 வயது நிறைவடைந்து சமூகமயமாகும் போது, உயர்கல்வி கற்கவோ அல்லது தொழில் வாய்ப்புகளைப் பெறவோ அவசியமான சேமிப்பு நிதி அவர்களிடம் இருக்கும் எனவும், ஆதரவற்றோரைக் கைவிடாமல் அவர்களுக்காகவும் பொறுப்புடன் செயற்படும் அரசாங்கமாக இந்த அரசாங்கத்தின் ஆட்சி விளங்குவதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்தார்.

Latest News
இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!
Local
21 September 2026
காவல்துறையினரின் திடீர் முற்றுகை : கொலன்னாவையில் ஆயுதக் குவியல் சிக்கியது!
Local
21 September 2026
திருகோணமலை கடற்படை முகாமில் பெண்கள் காணாமல்போன வழக்கு: முன்னாள் பெண் கடற்படை வீராங்கனைகள் 2 பேருக்கு விளக்கமறியல்!
Local
21 September 2026
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
Local
21 September 2026
அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
Local
21 September 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!
Local
21 September 2026
ஜே.வி.பியின் கம்பஹா அலுவலக நிலையை மாற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
21 September 2026
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026