General20 September 2026

22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அந்த வியாக்கியானம் எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குறித்த திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் 24ஆம் திகதி பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. "22க்கு எதிராக 24" என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes