General21 September 2026

நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, இலங்கையின் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8 மில்லியனைக் கடந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தத் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, நாட்டின் பொருளாதார ரீதியில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை 8.4 மில்லியனாகவும், பொருளாதார ரீதியில் செயற்பாடற்ற மக்கள் தொகை 8.6 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் அதிகூடிய பெண் தொழிலாளர் சக்திப் பங்களிப்பு நுவரெலியா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், மிகக் குறைந்த பெண் தொழிலாளர் சக்திப் பங்களிப்பு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes