2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற நீண்டகால விசாரணையின் பின்னர், கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயம் தீர்மானித்துள்ளது.
நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் இரண்டாயிரத்து 309 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் காவல்துறையினரிடம் வழங்கிய 10 வாக்குமூலங்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன், தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள், மரபணு (DNA) அறிக்கைகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகளின் அறிக்கைகளும் அரசுத் தரப்பினால் நீதிமன்றத்தில் சாட்சியங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், வெடிபொருட்கள், வெடிபொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 76 வழக்குப் பொருட்களும் அரசுத் தரப்பினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை, உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நௌஃபர் மௌலவி என அழைக்கப்படும் மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌஃபர் மற்றும் கபூர் மாமா என்று அழைக்கப்படும் மொஹமட் சரீஃப் ஆதம் லெப்பை உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு தொடரும் 'ஹிட் விக்கெட்' சரிவு: ஹிரு ஸ்போர்ட்ஸ் ஆய்வு தகவல்!
Local
23 September 2026
வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?
Local
23 September 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
23 September 2026
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
23 September 2026
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
Local
23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
Local
23 September 2026