22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வியாக்கியானம் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார்.
இதேவேளை, இலங்கை பட்டய ஊடகத் தொழில்சார் நிபுணர்கள் நிறுவன சட்டமூலத்தை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை முற்பகல் 11.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெற முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், பல ஊடக அமைப்புகள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான நாடாளுமன்ற அலுவல்கள் குழு, சட்டமூலம் மீதான விவாதத்தை காலவரையின்றி ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்குப் பதிலாக, விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்பு சட்டமூலம் நாளை விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான கட்டளை இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17 ஆயிரத்து 213 மில்லியன் ரூபாய் நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனிடையே, அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
புற்றுநோய் விழிப்புணர்வுக்கான 'உலக ரோஜா தினம்' இன்று!
Local
22 September 2026

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்!
Local
22 September 2026
5 பேர் கொண்ட குடும்பமா? பின்புற இருக்கையில் கூடுதல் இருக்கைப்பட்டி பொருத்த யோசனை!
Local
22 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
22 September 2026
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்
Local
22 September 2026
இலங்கை – கட்டார் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கவனம்!
Local
22 September 2026
யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!
Local
22 September 2026