General22 September 2026

அப்புத்தளையில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு காவல்துறை அவசர எச்சரிக்கை!

அப்புத்தளை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, வீதிகளில் எதிரே வரும் வாகனங்களைக் கூட தெளிவாகக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வாகன சாரதிகள் தங்களது வாகனங்களின் முன்விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்தவாறு அவதானமாக பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக வீதி விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், சாரதிகள் வேகத்தைக் குறைத்து, போதிய இடைவெளியைப் பேணி, முன்னெச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes