General22 September 2026

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவினமாக 4,992.77 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமான 4,434.36 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது 558.41 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும்.

அத்துடன், அரசாங்கத்தின் கடன் தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த நிதியிலிருந்து 4,845 பில்லியன் ரூபாய் செலவிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், 2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் கடன் பெறும் உச்சவரம்பு 3,800 பில்லியன் ரூபாவாக மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes