General22 September 2026

புற்றுநோய் விழிப்புணர்வுக்கான 'உலக ரோஜா தினம்' இன்று!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் விதைக்கும் வகையில் அனுஷ்டிக்கப்படும் 'உலக ரோஜா தினம்' இன்று (22) கடைப்பிடிக்கப்படுகிறது.

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நோயுடன் போராடி வருபவர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்குவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி மெலிண்டா ரோஸின் நினைவாக, புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மன உறுதியை வலுப்படுத்துவதுடன், அவர்களுக்கு சமூகத்தின் ஆதரவு மற்றும் அன்பை வெளிப்படுத்தும் நாளாகவும் உலக ரோஜா தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes