நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ஸ்மார்ட் பலகைகளை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, 2024ஆம் ஆண்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட 1,000 ஸ்மார்ட் பலகைகள், 1,000 பாடசாலைகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 2025–2026ஆம் ஆண்டுகளுக்கான சீன உதவித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 900 ஸ்மார்ட் பலகைகளில், 500 பலகைகள் இதுவரை பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை நிறுவும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
மேலும், டிஜிட்டல் பணிக்குழுவின் வழிகாட்டுதலின் கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மாகாண மட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 2,670 ஸ்மார்ட் பலகைகளையும் முழுமையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தப் பலகைகளை பாடசாலைகளில் நிறுவும் பணிகளும் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாகாண மட்டத்தில் அதிகளவான ஸ்மார்ட் பலகைகள் வடமேல் மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 524 ஆகும்.
மேல் மாகாணத்திற்கு 481, கிழக்கு மாகாணத்திற்கு 371, ஊவா மாகாணத்திற்கு 363, தென் மாகாணத்திற்கு 311, வடமத்திய மாகாணத்திற்கு 200, மத்திய மாகாணத்திற்கு 170, சப்ரகமுவ மாகாணத்திற்கு 150 மற்றும் வட மாகாணத்திற்கு 100 ஸ்மார்ட் பலகைகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடசாலை வகுப்பறைகளை டிஜிட்டல் மயப்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே இந்தத் திட்டங்களின் பிரதான நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
Latest News
அனோஜனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
Local
24 September 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
Local
24 September 2026
அவுஸ்திரேலிய அரசின் Medicare தளத்திற்குள் OpenAI-ன் AI Agent ஊடுருவல் : விசாரணைகள் தீவிரம்!
Local
24 September 2026
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் போராட்டம் - கடும் போக்குவரத்து நெரிசல்
Local
24 September 2026
"ஒரு பக்கம் அப்பா படம், மறுபக்கம் அஜித் சேர் படம்..." : இரகசியம் உடைத்த ஜேசன் சஞ்சய்!
Local
24 September 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : மீண்டும் உலக சந்தையில் சடுதியாக சரிந்த விலை!
Local
24 September 2026
திடீரென குறைந்த மசகு எண்ணெய் விலை : மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திற்கு மத்தியிலும் திடீர் மாற்றம்!
Local
24 September 2026
கித்துல்கலவில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு : ஒருவர் மாயம்!
Local
24 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026