வெலிகம நகரிலுள்ள பிரதான அஞ்சல் நிலையத்தின் வருடாந்த கணக்காய்வின்போது, சுமார் 21 இலட்சம் ரூபாய் பணம் கணக்கில் இடம்பெறாதது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிகம பிரதான அஞ்சல் நிலையத்தின் கீழ் 17 உப அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருவதுடன், கடிதப் பரிமாற்றம், பொருட்களை அனுப்புதல், வாகன அபராதம் செலுத்துதல், முதியோர் கொடுப்பனவு மற்றும் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த அஞ்சல் நிலைய வலையமைப்பின் ஊடாக தினசரி வருமானமாக 30 முதல் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அஞ்சல் நிலையத்தின் வருமானம் மற்றும் செலவுகள் தினசரி முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பிரதான அஞ்சல் நிலையத்தில் அதிகபட்சமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கையிருப்பாக வைத்திருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு மேலதிகமாகக் கிடைக்கும் பணம் தினசரி வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டிய நிலையில், அவ்வாறு வைப்பிலிடப்பட வேண்டிய பணம் முறையாகக் கையாளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வருடாந்த கணக்காய்வின்போது 21 இலட்சம் ரூபாய் தொடர்பில் ஏற்பட்ட கணக்கு முரண்பாடு குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயம் தொடர்பாக வெலிகம பிரதான அஞ்சல் நிலையத்தின் தற்போதைய அஞ்சல் நிலைய அதிபரிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது, உரிய அனுமதியின்றி இது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Local
23 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பு!
Local
23 September 2026
ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நாளை ஆரம்பம்!
Local
23 September 2026
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட அவுஸ்திரேலியா!
Local
23 September 2026
இலங்கை ஏற்றுமதித் துறையின் அதிரடி வளர்ச்சி - சர்வதேச சந்தையில் இலங்கைக்கு பலமான இடம்
Local
23 September 2026
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
Local
23 September 2026
வெலிகம அஞ்சல் நிலையத்தில் ரூ. 21 இலட்சம் மாயம்? – அஞ்சல் திணைக்களம் விசாரணை
Local
23 September 2026
நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
23 September 2026