2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத வளர்ச்சியாகும்.
இந்தக் காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு ஏற்றுமதித் துறைகளிலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 3.63 சதவீதம் அதிகரித்து 9.41 பில்லியன் டொலர்களாகவும், சேவைகள் ஏற்றுமதி வருமானம் 6.59 சதவீதம் அதிகரித்து 2.60 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.60 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.77 சதவீத அதிகரிப்பாகும்.
ஆகஸ்ட் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 13.97 சதவீதம் அதிகரித்து 331.87 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதுடன், பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1.27 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதித் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இந்த வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Latest News
திடீரென குறைந்த மசகு எண்ணெய் விலை : மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திற்கு மத்தியிலும் திடீர் மாற்றம்!
Local
24 September 2026
கித்துல்கலவில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு : ஒருவர் மாயம்!
Local
24 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
Local
24 September 2026
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026