சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (23) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்கு அப்பாற்பட்ட நாட்டின் பொருளாதார தொலைநோக்கு குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2027 மார்ச் மாதத்திற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார தாக்குப்பிடிக்கும் திறன், வெளிப்பக்கக் காரணிகள், அந்நியச் செலாவணி இருப்பு, கடன் நிலைத்தன்மை, அரச நிதி நிலைமை மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
அரச நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரச் சீரமைப்புகளால் உழைக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது சமநிலையற்ற சுமை சுமத்தப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
வறுமைக்கோட்டிற்குள் உள்ள குடும்பங்கள் மற்றும் நுண், சிறு, நடுத்தர அளவிலான தொழில்துறைகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வெற்றியை வெறும் மக்ரோ பொருளாதாரக் குறிகாட்டிகளால் (Macroeconomic indicators) மட்டும் அளவிடாமல் வறுமை, பொருட்களின் விலைகள், பணவீக்கம் மற்றும் குடும்ப வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேலாக அதிக முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் குடும்ப வருமான வளர்ச்சி என்பவற்றுடன் கூடிய நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாடு நகர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டம் நிறைவடையும் போது இலங்கை அடைய வேண்டிய பொருளாதார நிலைமைகள் மற்றும் 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் இலங்கைக்குத் தொடர்ச்சியான நிதி வேலைத்திட்டம் தேவையா என்பதை தீர்மானிக்கும் குறிகாட்டிகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்தக் கோரியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அதன் 7ஆவது மதிப்பாய்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலும், 8ஆவது மதிப்பாய்வு 2027 மார்ச் மாதத்திலும் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
'ஹோர்முஸ்' நீரீணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!
Local
24 September 2026
காசாவிற்குள் முழுமையான நிவாரணத்தை வழங்கவும் மேற்குக் கரை குடியேற்றங்களை நிறுத்தவும் பிரான்ஸ் வலியுறுத்தல்!
Local
24 September 2026
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
Local
24 September 2026
IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!
Local
24 September 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
24 September 2026
அனோஜனின் உயிரைக் காக்க மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் பூரண ஆதரவு!
Local
24 September 2026
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு தொடரும் 'ஹிட் விக்கெட்' சரிவு: ஹிரு ஸ்போர்ட்ஸ் ஆய்வு தகவல்!
Local
23 September 2026
வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?
Local
23 September 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
23 September 2026
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026