General23 September 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ள பின்னணியில், இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதா? இல்லையா? என்பது குறித்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிப்படி எடுக்க சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அரசியலமைப்புப் பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு அவசியமா என்பதை தீர்மானிப்பது மட்டுமே உயர்நீதிமன்றத்தின் பணியாகும் என்றும், இது இந்த்த திருத்தச்சட்டமூலத்தின் பொருத்தப்பாடு குறித்த தீர்ப்பு அல்ல என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, வெளிப்படைத்தன்மையின்றி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திருத்தச்சட்டமூலத்தின் விளைவுகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தி, இறைமையுள்ள மக்களுக்காகக் கொள்கை ரீதியான முடிவை எடுக்கும் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உரியது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes