Entertainment07 June 2026

பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!

மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வளம் வந்த நடிகர் சலீம் குமார் உடல்நலக்குறைவால் தனது 57ஆவது வயதில் காலமானார்.
 
திடீர் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அவரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகிற்குள் நுழைந்த அவர், 1997இல் 'இஷ்டமானு நூறு வட்டம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சலீம் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes