Entertainment08 July 2026

இயற்கையைப் பாதுகாக்க நதியைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

இயற்கையைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நதியைத் திருமணம் செய்துகொண்டு, அதன் உரிமைகளுக்காகப் போராடி வரும் வினோதச் சம்பவம் உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மற்றும் திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வுகளைப் பொறுத்தது என்றாலும், இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயதான மெக் (Meg) என்ற இளம்பெண் வித்தியாசமான ஒரு காரணத்திற்காகத்  திருமண வாழ்வில் நுழைந்துள்ளார்.

இங்கிலாந்தின் ஏவன் (Avon) நதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதைக் கண்டு கவலையடைந்த அவர், அந்த நதியின் அவல நிலையை உலகிற்கு உணர்த்த முடிவு செய்தார். இதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஏவன் நதியை அவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

அன்று முதல், தனது பெயரை ‘மெக் ஏவன்’ (Meg Avon) என மாற்றிக்கொண்ட அவர், தன்னை அந்த நதியின் மனைவியாகவே முன்னிறுத்தி வருகிறார்.

தற்போது ஏவன் நதிக்குச் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு புதுமையான இயக்கத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இதற்காக மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழக (University of the West of England) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அவர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes