Entertainment14 July 2026

சமூக வலைதளங்களில் போலி கணக்குகள்: நடிகை பாவனா எச்சரிக்கை

தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் இயங்குவது குறித்து நடிகை பாவனா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமக்கு பேஸ்புக் கணக்கு எதுவும் இல்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

தாம் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்துள்ளதாகவும், அதற்கான பயனர் பெயர் @bhavzmenon என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் போலத் தோற்றமளிக்கும் அல்லது தனது பெயரில் இயங்கும் ஏனைய கணக்குகள் எதற்கும் தமக்குத் தொடர்பில்லை என்றும், அவை போலி கணக்குகள் என்றும் அவர் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

இத்தகைய கணக்குகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes