தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தான் முதன்முதலில் இயக்கியுள்ள "சிக்மா" திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"நீர், நிலம், காற்று மற்றும் பணம் ஆகியவற்றின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில், மனித உறவுகளின் மதிப்பு குறைந்து வருவது ஏன்? என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றவர்கள் உங்களை நம்புகிறார்களோ இல்லையோ, உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள் என்பதுதான் இந்தப் படம் சொல்லும் பிரதான செய்தியாகும்" என்று குறிப்பிட்டார்.
சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால், சிறுவயது முதலே உலகத் திரைப்படங்களை ரசித்து வந்தமையே நான் ஒரு கதை இயக்குநராக உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கனடாவில் சினிமா தயாரிப்பு தொடர்பான கற்கையை மேற்கொண்டபோது எழுதிய கதையை, தற்போது 'சிக்மா' திரைப்படமாக மாற்றியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
நடிப்பு வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஜேசன் சஞ்சய், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னை நடிக்க அழைத்திருந்த போதிலும், அந்தச் சமயத்தில் தனக்கு இருந்த முதிர்ச்சியின்மை காரணமாக அதைத் தவிர்க்க நேரிட்டதாகக் குறிப்பிட்டார்.
"சிக்மா" திரைப்படம் வெளியான பின்னரே, தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதா அல்லது நடிப்பில் கவனம் செலுத்துவதா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
அவர் தான் நம் முதல்வர் - ஜோசப் விஜய்க்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வரலட்சுமி
Local
16 July 2026
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி - இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
Local
16 July 2026
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா! - வைரலாகும் பேபிமூன் நிழற்படங்கள்
Local
16 July 2026
அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும்? ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு
Local
16 July 2026
பணத்தின் மதிப்பு கூடுகிறது, உறவுகளின் மதிப்பு குறைகிறது - மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026
'நிபுண சவிய' நிதி உதவித் திட்டம் - காலஅவகாசம் தொடர்பில் புதிய தகவல்
Local
16 July 2026
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள், ஆபரணங்களுடன் மூவர் கைது
Local
16 July 2026
கொங்கோ குடியரசின் காட்டில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு!
Local
16 July 2026
"பெற்றோர் தந்த எனர்ஜி" : தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்!
Local
16 July 2026
எல்லைக் கோட்டுக்கு அப்பால் ஆயிரம் முறை! பொல்லார்டின் அபார சாதனை
Local
16 July 2026