Entertainment24 July 2026

"தளபதி விஜய்யை மிஸ் பண்ணப்போகிறோம்": நடிகை த்ரிஷாவின் தாயார் உருக்கம்

தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதேவேளையில், இந்த திரைப்படம் அவரது கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.

அந்தவகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகை த்ரிஷாவின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தோம். படம் மிகவும் நன்றாக இருந்தது. இருப்பினும், இது அவருடைய கடைசிப் படம் என்பது வருத்தமளிக்கிறது. நிச்சயமாக நாம் அவரை மிஸ் செய்யப் போகிறோம்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes