Entertainment26 July 2026

ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' திரைப்பட வெளியீடு எப்போது?

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள அறிமுகத் திரைப்படம் 'சிக்மா'.

நடிகர் சந்தீப் கிஷன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், சண்டைக் கதைக் களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்பாக இந்த திரைப்படம் ஜூலை 31 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜூலை 23 ஆம் திகதி திரைக்கு வந்ததைத் தொடர்ந்து, அத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு வழிவிடும் வகையில் 'சிக்மா' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கோலிவுட் திரையுலக தரப்புக்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தயாரிப்புத் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்றாலும், தயாரிப்பாளர்கள் விரைவில் படத்தின் விளம்பரப் பணிகளைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes