Entertainment29 July 2026

பிரபல தென்னிந்திய சின்னத்திரை நடிகர் ஜெயமணி காலமானார்

தென்னிந்திய சின்னத்திரை நடிகர் ஜெயமணி மாரடைப்பால் காலமானார்.

சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஜெயமணி, மேடை நாடகங்கள் வாயிலாகத் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.

எனினும், ‘திருமதி செல்வம்’ என்ற நெடுந்தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

மேலும், அவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜெயமணி, நடிப்பைத் தாண்டி சுமார் 40 தொடர்களில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes