Entertainment03 August 2026

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் உருவாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தகவல்களின்படி, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா 2' திரைப்படமும், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படமும் உருவாகவுள்ளதாக திரையுலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தத் திரைப்படங்கள் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் உருவாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes