மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘செய் செய்யாதே’.
மருத்துவத் துறையின் மனிதநேயப் பார்வையை பதிவு செய்யும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், இந்திய அரசியல் தலைவர் எச். ராஜா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கதையின் முக்கியமான பகுதியில் இடம்பெறும் அவரது கதாபாத்திரம் படத்தின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ளார்.
மருத்துவரும் திரைப்பட இயக்குநருமான எஸ். ராஜா இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ விழிப்புணர்வு கருத்துகளை சினிமா வடிவில் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கதாநாயகனாக குரு விஜய் நடித்துள்ள நிலையில், மருத்துவர்களின் பங்களிப்பு, நோயாளிகளின் நம்பிக்கை, செவிலியர்கள் மற்றும் சுகாதார அமைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்களை திரைப்படம் பேசுகிறது.
திருநெல்வேலி, கொடைக்கானல் மற்றும் மதுரை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.4 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் எஸ். ராஜா, தர்ஷினி ரெட்டி, டபிதா குணரத்தினே, மோனிகா ப்ரீத்தி வி, குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை ராம்நாடு பி. வாசு மேற்கொண்டுள்ளதுடன், தேசிய திரைப்பட விருது பெற்ற படத்தொகுப்பாளர் ராஜா முகமது படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
“மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல, அது மனிதநேயம், நம்பிக்கை மற்றும் பொறுப்பின் வெளிப்பாடு என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த திரைப்படத்தின் நோக்கம்” என இயக்குநர் எஸ். ராஜா தெரிவித்துள்ளார்.
Latest News
சிறைச்சாலை மோதல் தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
Local
09 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
09 August 2026
தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை
Local
09 August 2026
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
Local
09 August 2026
சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
Local
09 August 2026
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!
Local
09 August 2026
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
Local
09 August 2026
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் - போதைப்பொருட்களுடன் இருவர் கைது
Local
09 August 2026
நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!
Local
09 August 2026
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!
Local
09 August 2026