Entertainment07 August 2026

டொராண்டோ திரைப்பட விழாவில் அமலா பாலின் ஹாஃப்: சர்வதேச அளவில் மாஸ் காட்டும் புதிய படம்!

நடிகை அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாஃப் (Half) திரைப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது.

சம்ஜத் இயக்கத்தில், ஆனி மற்றும் சஜீவ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

மலையாள மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் அரபு ஆகிய 6 மொழிகளில் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பதன் மூலம், ஹாஃப் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes