தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தமிழில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகிலும் பிரபலமான இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார்.
தற்போது ஷாருக்கானின் ‘கிங்’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், நானியின் ‘தி பாரடைஸ்’, ‘AK 64’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம், திரைப்படப் பணிகளில் எப்போதாவது அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அனிருத், “இசையமைப்பதற்காக எனக்கு மிகப்பெரிய வேதனம் வழங்கப்படுகிறது. எனக்கு அழுத்தமாக இருக்கிறது என்று உணர்ந்தால், அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன். அங்கிருந்து வெளியேறிவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு திரைப்படத்தைப் பார்க்க 10 பேர் திரையரங்கிற்கு வந்தால், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் அந்த எண்ணிக்கையை 13 அல்லது 14 ஆக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.
Latest News
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026