Sports07 June 2026

நாணய சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes