Sports12 June 2026

இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

கிங்ஸ்டன், ஜமைக்காவில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 9 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக கமிந்து மென்டிஸ் 39 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 23 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், இஷான் மலிங்க 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்தும் 150 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக ஷாய் ஹோப் 54 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையும், பிரண்டன் கிங் 22 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.


Related recommendation
Hiru TV News | Programmes