Sports14 June 2026

மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமநிலைப்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes