Sports14 July 2026

இலங்கை ப்ரீமியர் லீக்கில் களமிறங்கும் ஷாஹீன் ஷா அப்ரிடி

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள 2026 இலங்கை ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் 'கண்டி ரோயல்ஸ்' அணிக்காக விளையாடவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் அப்ரிடிக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில், அவருக்கு இலங்கை ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை (NOC) பாகிஸ்தான் கிரிக்கெட் வழங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு குறியீட்டு காணொளியைத் தொடர்ந்து, அப்ரிடியின் வருகையை எல்.பி.எல் (LPL) நிர்வாகம் உறுதிப்படுத்தியது.

கண்டி ரோயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் ஐந்து பாகிஸ்தான் வீரர்களில் அப்ரிடியும் ஒருவர் ஆவார்.

அவரைத் தவிர, மொஹமட் நவாஸ், மொஹமட் ஹாரிஸ் மற்றும் ஷாநவாஸ் தஹானி, மொஹமட் வசீம் ஜூனியர் ஆகிய வீரர்களும் இந்தத் தொடரில் விளையாடவுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes