Sports16 July 2026

உலக கிரிக்கெட்டில் புதிய மாற்றங்கள்! மொரீஷியஸுக்கு ஐசிசி அங்கீகாரம்

ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிர்வாகம், உறுப்பினர் தகுதி மற்றும் நிதி தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மொரீஷியஸ் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 111வது உறுப்பினர் நாடாக அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உறுப்பினர் தகுதிக்கான விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட பிரான்ஸ் கிரிக்கெட் அமைப்புக்கு ஐசிசி அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இதுவரை கூடுதல் ஒழுங்கு நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு 12.82 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.

கனடா கிரிக்கெட் அணி தொடர்பில், உறுப்பினர் கடமைகளில் கடுமையான மீறல்கள் ஏற்பட்டதாகக் கூறி கடந்த ஜூன் மாதம் விதிக்கப்பட்ட இடைநீக்கம் தொடர்கிறது. எனினும், அந்த இடைநீக்கத்தை நீக்குவதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளையும் ஐசிசி நிர்ணயித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes