Sports18 July 2026

கால்பந்து செம்பியன்ஷிப்பின் மூன்றாம் இட போட்டியில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள்

கால்பந்து செம்பியன்ஷிப்பின்; மூன்றாம் இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (ஜூலை 18) மோதுகின்றன.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

அரையிறுதியில் தோல்வியடைந்த பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காக மோதுகின்றன.

முன்னதாக அரையிறுதியில் ஸ்பெயினிடம் பிரான்சும், அர்ஜென்டினாவிடம் இங்கிலாந்தும் தோல்வியடைந்தன.

இந்த மூன்றாம் இடத்துக்கான போட்டியை பொறுத்தவரை பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக 14 ஆண்டுகள் பணியாற்றிய டிடியர் டெஷாம்ப்ஸ், இந்தப் போட்டியுடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார். இது அவருக்குக் கடைசிப் போட்டியாகும்.

பிரான்ஸ் அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே, இந்த கால் பந்து செம்பியன்ஷிப்பில் கோல்டன் பூட் (தங்கக் பாதணி)விருதை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

அவர் இரண்டாவது முறையாக இந்த விருதை வெல்லும் முதல் வீரராக மாற வாய்ப்புள்ளது.

இரண்டு அணிகளின்; பயிற்சியாளர்களும், தாங்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற விரும்பியதாகவும், இது போன்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் விளையாடுவது கடினமான அனுபவம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இரண்டு அணிகளும் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes