Sports26 July 2026

சி.எஸ்.கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா?

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகவுள்ள ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்ற, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயுடன் மேலதிக ரொக்கத் தொகையையும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கோரியதாகக் கூறப்படுகிறது.

மேலும், சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய இருவரையும் உள்ளடக்கிய தொகுப்பையும் (Trade deal) மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கிறது.

ஆனால், 19 வயதான ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விரும்பவில்லை.

அதற்குப் பதிலாக சிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ரூ.10 கோடி ரொக்கம் அடங்கிய மாற்றுச் சலுகையைச் சென்னை சுப்பர் கிங்ஸ் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இரு அணிகளும் இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை உறுதி செய்யவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், சூழ்நிலையைக் கண்காணித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற பிற அணிகள் ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்றத் தயாராக உள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes